தேசியம்
செய்திகள்

Rogers நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை பதிவு

Rogers நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Rogers சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் முழுவதும் செயலிழப்பை நாடளாவிய ரீதியில் எதிர்கொண்ட நிலையில் Quebec நபர் ஒருவர் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்

இந்த வழக்கில் Rogers தொலைத்தொடர்பு நிறுவனம் அலட்சியமாக இருந்ததாகவும், ஒரு நாள் முழுவதும் நாட்டை முடக்கி வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதியால் இன்னும் அங்கீகரிக்கப்படாத இந்த வழக்கு, திங்கட்கிழமை (11) Montrealலில் உள்ள உயர் நீதிமன்றத்தில் சட்ட நிறுவனமான LPC Avocat Inc. மூலம் தாக்கல் செய்யப்பட்டது.

July 8, 9 ஆம் திகதிகளில் சேவை செயலிழப்பால் பாதிக்கப்பட்ட Rogers வாடிக்கையாளர்களுக்கு தலா 400 டொலர் இழப்பீட்டை இந்த வழக்கு கோருகிறது.

Fido Mobile, Chatr Mobile போன்ற Rogers துணை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இந்த வழக்கில் இழப்பீடு கோரப்படுகிறது.

Rogers நிறுவனத்தின் முக்கிய பராமரிப்பு புதுப்பிப்பு காரணமாக இந்த சேவை தடை ஏற்பட்டதாக Rogers தலைமை நிர்வாக அதிகாரியுமான Tony Staffieri சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Related posts

COVID காரணமாக 37 ஆயிரம் பேர் வரை மரணம்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பில் அதிக வாக்குகள் பதிவு

Lankathas Pathmanathan

Ontarioவில் நான்காவது COVID  தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment