February 22, 2025
தேசியம்
செய்திகள்

நடைபெறவுள்ளது ஒரு நியாயமான தேர்தல் இல்லை: Patrick Brown குற்றச்சாட்டு

நடைபெறவுள்ள Conservative கட்சியின் தலைமைப் போட்டி ஒரு நியாயமான தேர்தல் இல்லை என கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Patrick Brown கூறினார்.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்கள் இந்த முடிவை செவ்வாய் இரவு (05) எடுத்துள்ளனர்.

தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையின் அடிப்படையில் Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவினால் பெறப்பட்ட புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த தகுதி நீக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

தேர்தல் நிதி விதிகளை மீறியதான குற்றச்சாட்டின் பேரில் Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் தலைமைப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் ஊழல் காரணமென Brown குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவில் உள்ள Pierre Poilievre ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருப்பதாக Brown தெரிவித்தார்.

Conservative கட்சி Poilievreக்கு ஆதரவாக செயல்படுவதாக Brownனின் பிரச்சார குழு ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது.

Brown மீதான அநாமதேய குற்றச்சாட்டுகள் இவை என கூறும் அவரது பிரச்சார குழு, இதற்கு எதிராக சட்ட ஆலோசனையை பெறுவதாகவும் கூறியுள்ளது.

Brown முன்வைத்த குற்றச்சாட்டை தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவில் பேச்சாளர் நேரடியாக மறுத்தார்.

தமக்கும் இந்த தகுதி நீக்கத்திற்குக் எந்த தொடர்பும் இல்லை என Poilievreஇன் பிரச்சார குழு மறுத்துள்ளது.

பல ஊழல்களால் வரையறுக்கப்பட்ட வாழ்க்கையின் சமீபத்திய அத்தியாயம் இது என Poilievreரின் பிரச்சார குழு இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்தது.

Conservavtive கட்சியின் புதிய தலைவர் September மாதம் 10ஆம் திகதி தெரிவு செய்யப்படுவார்.

Related posts

COVID பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு மேலதிகமாக 8.1 பில்லியன் டொலர்கள்: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

Peel காவல்துறை தலைவரின் இலங்கை பயணம் குறித்த சுயாதீன காவல்துறை மீளாய்வுக்கு TGTE அழைப்பு

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் இரு மொழி நிலையை தொடர்ந்து வைத்திருக்க நடவடிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment