February 22, 2025
தேசியம்
செய்திகள்

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

இளம் குழந்தைகளுக்கான முதல் COVID தடுப்பூசியை இந்த மாதம் கனடா அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான Moderna தடுப்பூசியை அங்கீகரிக்கலாமா என்பது குறித்து இந்த மாத நடுப்பகுதியில் ஒரு முடிவை எட்ட இருப்பதாக Health கனடா செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தது.

இந்த தடுப்பூசியை இரண்டு பகுதியாக வழங்க Moderna விண்ணப்பித்துள்ளது.

வயது வந்தோருக்கான தடுப்பூசி அளவின் நான்கின் ஒரு பகுதி, நான்கு வார இடைவெளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதியை Pfizer நிறுவனம் Health கனடாவின் கடந்த மாதம் 23ஆம் திகதி கோரியிருந்தது.

இந்த விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வதற்கு காலவரிசையை உருவாக்கி வருவதாக Health கனடாவின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்.

ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசியை கனடா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

விடுப்பு எடுப்பதாக அறிவித்த மாகாண அமைச்சர்!

Lankathas Pathmanathan

Trudeau சட்டத்தை மீறவில்லை; Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளார்: WE அறக்கட்டளை

Gaya Raja

எல்லைப் பணியாளர்கள் ;வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தத்தம்!

Gaya Raja

Leave a Comment