Ontario மாகாணம் COVID தொற்றின் கோடைகால அலைக்குள் நுழைந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேல் நோக்கி செல்வதாக, தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Ontarioவின் மிக சமீபத்திய தரவுகளில், PCR சோதனையின் மூலம் கண்டறியப்பட்ட புதிய தொற்றுகளின் ஏழு நாள் சராசரி, கடந்த வாரத்தை விட 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
Ontario மருத்துவமனைகளில் 585 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் 486 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.