கனடாவில் உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
Quebecகில் 202, Ontarioவில் 67, Albertaவில் 5, British Columbiaவில் இரண்டு என தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை (29) அறிவித்தது.
தொற்று குறித்த விசாரணை தொடரும் நிலையில், கூடுதல் தொற்றுக்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் Monkeypox தொற்றுக்களை விசாரிக்க மாகாண, பிராந்திய பொது சுகாதார பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.