British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியில் ஆறு காவல்துறையினர் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை (28) நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியின் போது சந்தேக நபர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினர் ஆறு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வங்கி ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் உட்பட பொதுமக்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.