தேசியம்
செய்திகள்

Pope தனது கனடிய பயணத்தில் முதற்குடியினர் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கும் செல்வார்

Pope Francis தனது கனடிய பயணத்தின் போது, முதற்குடியினர் முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கும் செல்லவுள்ளார்.

அடுத்த மாதம் நிகழவுள்ள போப்பாண்டவரின் கனடியப் பயணத்திற்கான நிகழ்ச்சி நிரலை வியாழக்கிழமை (23) Vatican வெளியிட்டது.

இதில் Albertaவில் உள்ள முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கான பயணமும் அடங்குகின்றது.

Edmontonனில் July மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகும் Pope Francisசின் கனடிய பயணம் 29ஆம் திகதி Iqaluitடில் முடிவடையும்.

இந்த பயணம் பொது, தனியார் நிகழ்வுகளை உள்ளடக்கியதுடன், முதற்குடியினரின் பங்களிப்பை வலியுறுத்துகிறது.

இந்த பயணத்தின் வதிவிடப் பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பங்கிற்கு Pope Francis மன்னிப்பு கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Quebec பேருந்து விபத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவோம்: Conservative

Lankathas Pathmanathan

Kingston நகருக்கு வடக்கே படகு விபத்தில் மூவர் பலி – ஐவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment