February 23, 2025
தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு

Brampton நகரில் அமையவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு புதன்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Chinguacousy பூங்காவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச் சின்னத்திற்கான இறுதி வடிவமைப்பை தமிழ் சமூக உறுப்பினர்கள் Brampton நகர மண்டபத்தில் வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் Brampton நகர முதல்வர் Patrick Brown, பிராந்திய உறுப்பினர் Martin Medeiros உள்ளிட்ட Brampton நகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கைத்தீவின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் Brampton நகரில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு நகரசபை கடந்த வருடம் ஏகமனதாக அனுமதி அளித்தது.

Brampton தமிழ்ச் சங்கம், Brampton தமிழ் மூத்தோர் சங்கம் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

Related posts

புதிய வாடகை வீடுகளுக்கான GSTயை நீக்கும் அரசாங்கம்

Lankathas Pathmanathan

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற இலையுதிர் கால அமர்வு ஆரம்பமானது!

Lankathas Pathmanathan

Leave a Comment