கனடிய விமான நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான COVID பரிசோதனையை இடை நிறுத்தி வைக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நாளை முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த நடவடிக்கை இந்த மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (10) Transport கனடாவினால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தடுப்பூசி போடப்படாத பயணிகள் தொடர்ந்தும் விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுவார்கள்.
ஆனால் அடுத்த மாதம் முதல் இந்த பரிசோதனையை விமான.நிலையத்திற்கு வெளியே மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய பொது சுகாதார நடவடிக்கைகள் June மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
இந்த முடிவு கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்ட நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
Toronto Pearson சர்வதேச விமான நிலையம் உட்பட விமான நிலையங்களில், தாமதங்களுக்கு மத்தியில் COVID கட்டுப்பாடுகளை எளிதாக்க மத்திய அரசாங்கத்திற்கு அண்மைக் காலத்தில் தொடர்ந்தும் அழுத்தங்கள் அதிகரித்தன
பயணிகள் எதிர்நோக்கும் காலதாமதத்தை தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை Toronto Pearson சர்வதேச விமான நிலைய நடத்துனர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
கடந்த மாதம் Pearson சர்வதேச விமான நிலையத்தில் அரை மில்லியன் பயணிகள் தாமதங்களை எதிர்கொண்டுள்ளனர் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
சர்வதேச விமானங்களில் கனடாவை வந்தடைந்த பயணிகள் இந்த தாமதங்களை எதிர்கொண்டதாக Toronto பெரும்பாக விமான நிலைய ஆணையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.