தேசியம்
செய்திகள்

Poilievre தலைமையில் Toronto பெரும்பாகத்தில் Conservative கட்சி வெற்றி பெறாது: Brown

Conservative கட்சியின் தலைமை பதவியை Pierre Poilievre வெற்றிபெற்றால் அடுத்த பொதுத் தேர்தலில் கட்சிக்காக போட்டியிடப் போவதில்லை என Patrick Brown தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் September மாதம் நடைபெறவுள்ள Conservative கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் Poilievre, Brown உட்பட நால்வர் போட்டியிடுகின்றனர்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதில் உறுதியாக உள்ளதாக Brown தெரிவித்துள்ளார்.

தலைமைக்கான போட்டியில் முன்னாள் Quebec முதல்வர் Jean Charest அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் Leslyn Lewis ஆகியோர் வெற்றிபெற்றால் அடுத்த தேர்தலில் Consevative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Toronto பெரும்பாகத்தில் Conservative கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தை Poilievre குறைத்துவிடுவார் என நம்புவதாகவும் Brown தெரிவித்தார்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

வேலை நிறுத்தம் முடிவடைந்தது – LCBO உறுதி!

Lankathas Pathmanathan

சட்டவிரோத போதைப்பொருள் நச்சுத்தன்மையால் ஆயிரம் பேர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment