Ontario மாகாணம் Bill 104 மூலம் தமிழர் இனப்படுகொலையை உண்மையில் அங்கீகரிக்கவில்லை என Ontarioவின் உயர் நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் Ontarioவின் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு விசாரணையின் போது இந்த தகவல் வெளியானது.
இந்த விசாரணையில், Ontario இனப்படுகொலையை உண்மையில் அங்கீகரிக்கவில்லை என அரசாங்க வழக்கறிஞர்கள் வெளிப்படையாக அறிவித்தனர்.
இனப்படுகொலை என்ற வார்த்தை Bill 104 சட்டத்தின் முன்னுரையில் மட்டுமே உள்ளதனால் இது சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை என அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
May 2009 நிகழ்வுகளுக்கும் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தின் காலப்பகுதிக்கும் இடையே உள்ள தொடர்பை அரச தரப்பு வழக்கறிஞர் நிராகரித்துள்ளார்.