February 22, 2025
தேசியம்
செய்திகள்

சர்வதேச வர்த்தக அமைச்சர் குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை

சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
Liberal மூலோபாயவாதியால் இணைந்து நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இந்த விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
2020ஆம் ஆண்டு ஊடகப் பயிற்சிக்காக அமைச்சர் Ng அலுவலகத்தால் Pomp and Circumstance நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ஆராயுமாறு நெறிமுறைகள் ஆணையர் Mario Dionனை Conservative நாடாளுமன்ற உறுப்பினர் James Bezan கோரினா.ர்

அமைச்சர் Ng யாரோ ஒருவரின் தனிப்பட்ட நலனை முன் நிறுத்துவதற்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்தினாரா உள்ளிட்ட விடயங்களை ஆராயவுள்ளதாக  ஆணையர் Dion தெரிவித்தார்.

இந்த விசாரணை குறித்து அமைச்சர் Ng இடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொள்முதல் நெறிமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய ஒப்பந்தங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த விசாரணை குறித்து Alvaro அல்லது அவரது நிறுவனம் இதுவரை  கருத்து தெரிவிக்கவில்லை.

Related posts

Ontario போக்குவரத்துத்துறை இணையமைச்சராகும் தமிழர்

Lankathas Pathmanathan

Ontario மாகாண பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்!

Lankathas Pathmanathan

Quebec அனுப்பப்பட்ட கனடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan

Leave a Comment