December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Quebec மொழி சீர்திருத்த மசோதா 96,  தேசிய சட்டமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Quebecகில் பிரெஞ்சு மொழியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட மாகாண அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா 96, தேசிய சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

செவ்வாய் பிற்பகல் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் 78க்கு 29 என்ற அடிப்படையில் வாக்களித்தனர்.

Liberal, Parti Québécois ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.
இந்த மசோதாவை எதிர்த்து  நீதிமன்றம் செல்லவுள்ளதாக Montrealலை தளமாகக் கொண்ட ஒரு அரசியலமைப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Related posts

கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் சரண்

New Brunswick மாகாண சமூக மேம்பாட்டு அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Alberta மாகாணத்திலும் புதிய குழந்தை பராமரிப்பு திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment