கனேடிய நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (18) நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்த பிரேரணை குறித்து இலங்கை அரசாங்கம் வருத்தம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை கனேடிய நாடாளுமன்றம் உலகின் முதல் தேசிய நாடாளுமன்றமாக அங்கீகரித்தது.
Scarborough Rouge Park தொகுதியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இந்த பிரேரணையை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த பிரேரணையை கனேடிய நாடாளுமன்றம் ஏகமனதாக அங்கீகரித்து.
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கண்டறியவில்லை என்ற கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக இந்த பிரேரணை அமைவதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை குறித்த நாடாளுமன்றப் பிரேரணையில் உள்ள இனப்படுகொலை குறித்த அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது எனவும் அந்த அறிக்கை கூறுகின்றது.