February 22, 2025
தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

இரண்டாவது Ontario மாகாண அரசியல் கட்சி தலைவருக்கு COVID தொற்று உறுதி

தொடர்ந்து இரண்டாவது நாளாக Ontario மாகாண அரசியல் கட்சி தலைவர் ஒருவர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (19) அறிவிக்கப்பட்டது.

Ontario மாகாண NDP தலைவர் Andrea Horwath COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வியாழன் காலை எடுத்துக்கொண்ட rapid சோதனையில் COVID தொற்றை உறுதிப்படுத்தியதாக Horwath கூறினார்.

தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள Horwath இன்று முதல் பொது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றி மெய்நிகர் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார்

புதன்கிழமை பசுமை கட்சியின் தலைவர் Mike Schreiner, COVID தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்.

Schreiner பொது சுகாதார ஆலோசனையின் படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: Ottawa காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario: வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Gaya Raja

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது

Leave a Comment