COVID தொற்றுக்கு முந்தைய விதிகளுக்கு நாடு திரும்ப வேண்டும் என Conservative கட்சி தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.
அண்மைக் காலமாக விமான நிலையங்களில் தொடரும் தாமதங்கள் குறித்த செய்திகளின் மத்தியில் இந்த விடயத்தை Conservative கட்சி வலியுறுத்துகிறது.
விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகளை நீக்க நட்பு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து விமர்சகர் Melissa Lantsman, கனடா வணிக, பொருளாதார வாய்ப்புகளை இழந்து வருவதாக தெரிவித்தார்.
விமான நிலையங்களில் தாமதங்களை எதிர்கொள்ள வளங்கள் அதிகரிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra கூறினார்.