Alberta மாகாண முதல்வர் பதவியில் இருந்தும் United Conservative கட்சியின் தலைமை பதவியில் இருந்தும் விலகுவதாக Jason Kenney அறிவித்தார்.
United Conservative கட்சியின் தலைமை மதிப்பாய்வில் சிறிய பெரும்பான்மையை மாத்திரம் பெற்ற நிலையில் Kenney இந்த பதவி விலகலை அறிவித்தார்.
முதல்வர் Kenney குறித்த அவரது கட்சி உறுப்பினர்களின் தலைமை ஆய்வு முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியானது.
இந்த தலைமை மதிப்பாய்வில் 51.4 சதவீதமான ஆதரவை மாத்திரம் Kenney பெற்றிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் பதவியில் இருந்தும், தலைமை பதவியில் இருந்தும் விலகுவதாக Kenney அறிவித்தார்.
இந்த தலைமை மதிப்பாய்வில் 34,298 உறுப்பினர்கள் வாக்களித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்