அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசிடம் கோரவில்லை என Ottawa காவல்துறையின் இடைக்காலத் தலைவர் Steve Bell தெரிவித்தார்.
கடந்த February மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போது தேசிய அவசர நிலையை அறிவிப்பதன் மூலம் மட்டுமே வழங்கப்படக்கூடிய கூடுதல் அதிகாரங்களை காவல்துறையினர் கோரியதாக Liberal அரசாங்கம் தெரிவித்தது.
ஆனாலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு மத்திய அரசை RCMP கோரவில்லை என ஆணையர் Brenda Lucki கடந்த வாரம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்ற குழுவுடன் பேசிய Ottawa காவல்துறையின் இடைக்கால தலைவர், தாமும் இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை என தெளிவுபடுத்தினார்.
நாடாளுமன்ற குழுவுடனான உரையாடலில் Ontario மாகாண காவல்துறை, RCMP, Gatineau காவல்துறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.