Quebec மாகாண தேர்தலுக்கான தலைவர்களின் ஆங்கில விவாதம் நிறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் François Legault உட்பட இரண்டு கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்க மறுத்ததை அடுத்து இந்த விவாதம் நிறுத்தப்படுகிறது.
இந்த விவாதித்தால் கலந்து கொள்ள ஐந்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டனர்.
இந்த விவாதித்தால் பங்கேற்பதற்கான அழைப்பை முதல்வர் ஏற்கவில்லை என அவரது செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (13) உறுதிப்படுத்தினார்.
ஒவ்வொரு விவாதத்திலும் பங்கேற்பதற்கான பெருமளவில் தயாரிப்பு நேரம் தேவை என்பதை குறிப்பிட்ட முதல்வரின் செய்தித் தொடர்பாளர், ஒரு பிரெஞ்சு மொழி விவாதித்தில் Legault பங்கேற்பார் என உறுதிப்படுத்தினார்.
Quebec மாகாண தேர்தல் October மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.