பாப்பரசர் Francis தனது கனடிய பயணத்தின் போது முன்னாள் வதிவிட பாடசாலைகளுக்கு செல்லவுள்ளார்.
பாப்பரசர் July மாதம் கனடாவிற்கு மேற்கொள்ள உள்ள பயணத்தை வெள்ளிக்கிழமை (13) Vatican உறுதிப்படுத்தியது.
Francis July மாதம் 24 முதல் 29 வரை கனடாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
கனடாவில் உள்ள வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பங்கிற்காக போப்பாண்டவர் போப் கடந்த மாதம் மன்னிப்பு கோரியதை அடுத்து இந்த விஜயம் அமைகிறது.
இந்த பயணத்தின் போது பாப்பரசர் மீண்டும் இந்த விடயத்தில் மன்னிப்பு கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edmonton, Quebec City, Iqaluit ஆகிய இடங்களுக்கு அவர் பயணிக்கவுள்ளதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்தப் பயணம் குறித்த அறிவித்தலை முதற்குடி குழுக்கள் வரவேற்கின்றன.
இந்த பயணம் நல்லிணக்கத்திற்கான மற்றொரு முக்கிய நகர்வாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.