தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் எரிபொருளின் விலை மேலும் உயரும்

Victoria தினத்திற்குள் கனடா முழுவதும் எரிபொருளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை (10) நாடளாவிய ரீதியில் ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 218.9 சதம் வரை விற்பனையானது.

இந்த நிலையில் Victoria தின நீண்ட வார இறுதிக்குள் எரிபொருளின் விலை லிட்டருக்கு சராசரியாக 10 முதல் 15 சதம் வரை உயரக் கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 2 டொலர் 10 சதம் வரை விற்பனையாகும் என எதிர்வு கூறப்படுகின்றது.

Vancouverரில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 2 டொலர் 29 சதம் முதல் 2 டொலர் 35  சதம்  வரையும், Montrealலில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 2 டொலர் 15 சதம் முதல் 2 டொலர் 20  சதம்  வரையும் விற்பனையாகலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

Related posts

முதலாவது ஆட்டத்தில் வெற்றியடைந்த Blue Jays

Lankathas Pathmanathan

கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சராசரியை விட குறைவான பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

Albertaவிலும் Quebecகிலும் புதிய தொற்றுக்களால் பாதிக்கப் படுபவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள்!

Gaya Raja

Leave a Comment