தேசியம்
Ontario தேர்தல் 2022ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

ஆரம்பித்தது தேர்தல் பிரசாரம்: நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை!

Ontario மாகாணத்தில் பல வாரங்களாக தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருப்பதாக தோன்றினாலும் அதிகாரபூர்வமாக 28 நாள் பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமானது.

இந்த 28 நாள் பிரச்சார காலத்தில் அடியெடுத்து வைக்கும் போது நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை:

தற்போதுள்ள நிலை

பெரும்பான்மையை வெற்றிபெற வேண்டுமானால், மொத்தமுள்ள 124 தொகுதிகளில் ஒரு கட்சி 63 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 2018ஆம் ஆண்டு, Progressive Conservative கட்சி தேர்தல் தினத்தில் 76 இடங்களை கைப்பற்றி பாரிய வெற்றியைப் பெற்றது.

ஆனால் இந்த வாரம் பிரசாரத்தைத் தொடங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, PC கட்சியின் பதவியில் இருப்போரின் எண்ணிக்கை 67 ஆகக் குறைவடைந்தது. PC கட்சியின் மாகாணப் சபை உறுப்பினர்கள் நால்வர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாலும் மூவர் பதவி விலகியதாலும் இருவர் அரசியலில் இருந்து விலகியதாலும் அவர்களின் ஆசனங்கள் வெறுமையாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

புதிய ஜனநாயகக் கட்சி (NDP), 2018ஆம் ஆண்டு 19 கூடுதல் இடங்களைப் பெற்று, சட்டமன்றத்தில் 40 இடங்களுடன் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக மாறியது. NDP தேர்தலை எதிர்கொள்ளும்  போது பதவியில் இருக்கும் 33 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதுடன், 2018 ஆம் ஆண்டில் NDP வெற்றிபெற்ற 7 இடங்களை தக்கவைத்துக் கொள்ள புதிய வேட்பாளர்கள் முயற்சிப்பார்கள்.

Liberal கட்சியைப் பொறுத்தவரை, 2018ஆம் ஆண்டு வெறும் ஏழு இடங்களைப் பெற்றபோது, அதிகாரப்பூர்வ அந்தஸ்தை இழந்தது. மாகாண சபை கலைக்கப்பட்ட போது பதவியில் இருக்கும் வெறும் ஐந்து பேரும் புதிய தலைவர் Steven Del Duca தலைமையில் இம்முறை தேர்தலை எதிர்கொள்வார்கள்.

ஏனைய கட்சிகள்

2018ஆம் ஆண்டு Guelph தொகுதியில் தலைவர் Mike Schreiner தேர்ந்தெடுக்கப்பட்ட போது, பசுமைக் கட்சி (Green Party) அதன் முதல் ஆசனத்தை வென்றது. அந்த வெற்றியைக் கட்டியெழுப்ப கட்சி எதிர்பார்க்கும்.

இந்த மாகாணசபைத் தேர்தலில் மேலும் இரண்டு சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

Ontario கட்சி (Ontario Party) 2018ஆம் தேர்தலை ஐந்து வேட்பாளர்களுடன் மட்டுமே எதிர்கொண்டது. ஆனால் இந்தத் தேர்தலில்  நாற்பதிற்கும் மேற்பைட்ட  வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கட்சிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், Conservative கட்சியின் தலைமை வேட்பாளருமான Derek Sloan தலைமை தாங்குகிறார். சட்டமன்றத்தில் Chatham-Kent-Leamington தொகுதியின் மாகாணசபை  உறுப்பினர் Rick Nicholls கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். COVID தொற்றுக்கு  எதிராக தடுப்பூசி போட மறுத்ததற்காக PC கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் அவர் Ontario கட்சியில் இணைந்தார்.

New Blue Ontario கட்சி 124 தேர்தல் தொகுதிகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்துகிறது. Kitchener-Conestoga தொகுதியில் ஆசனத்திற்காக போட்டியிடும் Jim Karahalios கட்சிக்கு தலைமை தாங்குகிறார். Cambridge தொகுதியை இந்த கட்சியின் உறுப்பினர் Belinda Karahalios பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அவர் PC கட்சி சார்பில் 2018இல் அந்த தொகுதியை வென்றிருந்தார், ஆனால் இந்த வருடந்த்தின் ஆரம்பம் முதல் அவர் New Blue Ontario உறுப்பினராக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளார்.

விவாதங்கள்

PC கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, Liberal கட்சி, பசுமைக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுடன் இரண்டு விவாதங்கள் நடைபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. May மாதம் 10 ஆம் திகதி North Bayஇல் முதலாவது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் வடக்கு Ontarioவைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும். பின்னர், May மாதம் 16ஆம் திகதி, தலைவர்கள் 90 நிமிட தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபடுவார்கள். பசுமைக் கட்சியின் Mike Schreiner கலந்து கொள்ளும் முதலாவது மாகாண அளவிலான விவாதம் இதுவாகும்.

ஏனையவை

தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா ? வேட்புமனு தாக்கல் May 12 நண்பகல் 2 மணியுடன் முடிவடைகிறது. வேட்பாளராக இருக்க ஒருவர் கனடிய குடிமகனாகவும், Ontarioவில் வசிப்பவராகவும் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும் இருக்க வேண்டும். வேட்பு மனுவில் போட்டியிடும் தொகுதியில் வசிப்பவர்கள் 25 பேர் கையெழுத்திட வேண்டும்.

தலைவர்களின் பயணத்திட்டங்கள், அடுத்து நிகழவிருப்பவை குறித்து சூசகமான குறிப்புக்களைத் தரும்

கட்சிகளின் பிரசாரங்கள் தம் கட்சித் தலைவர்கள் மீது கவனத்தைக் குவித்து நடைபெறும் நிலையில், Ford, Horwath, Del Duca, Schreiner ஆகியோர் ஆரம்ப நாட்களிலே தமது செய்திகளை வெளியிடுவதையும், அதன் பின் அறிவித்தல்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஏனைய நிகழ்ச்சிகள், ஊடக நேர்காணல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதையும் கவனியுங்கள்.

தலைவர்கள் தங்கள் கட்சிகளால் எந்த தொகுதிகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதை கவனியுங்கள். June2ஆம் திகதி பெரும்பான்மையைப் பெறுவதற்கு அந்த 63 ஆசனங்களை எங்கு பெற முடியும் என ஒவ்வொரு கட்சியும் நினைக்கிறது என்பதை உணர்த்துவதற்கு எமக்கு இது உதவும்.

Related posts

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja

கனேடிய தேர்தல் பிரச்சாரம்: இரண்டாவது வாரம்!

Gaya Raja

பெருந் தொற்று நேரத்திலும் பசிபோக்கும் FYFB உணவு வங்கி!

Gaya Raja

Leave a Comment