தேசியம்
செய்திகள்

ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை முடித்தார் குடிவரவு அமைச்சர் Fraser

குடிவரவு, அகதிகள் குடியுரிமை அமைச்சர் Sean Fraser ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை வெள்ளிக்கிழமை (06) முடித்தார்.
இந்த வாரம் Belgium, France, Poland ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில் அமைச்சர் முக்கிய ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்புகளில் ஆப்கானிஸ்தான், உக்ரைனில் ஆகிய நாடுகளில் நிலவும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு உதவ கனடாவின் உறுதிப்பாட்டை அமைச்சர் Fraser மீண்டும் வலியுறுத்தினார்

குறைந்தபட்சம் 40 ஆயிரம் ஆப்கானிஸ்தான் பிரஜைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் குடியமர்த்துவதற்கு கனடா அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இதுவரை 12,605 ஆப்கானிஸ்தான் அகதிகளை கனடா வரவேற்றுள்ளதாக குடிவரவு அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சர்வதேச பயணிகளுக்காக புதிய COVID பரிசோதனைத் திட்டம்

Lankathas Pathmanathan

கனடாவில் மீண்டும் 3,000க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

February மாதத்தின் பின் கனடா வந்த 5,000க்கும் மேற்பட்ட சர்வதேச விமான பயணிகளுக்கு தொற்று!

Gaya Raja

Leave a Comment