December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக உறவுகள்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக உறவுகளை இரு நாடுகளின் வர்த்தக தலைவர்களும் உறுதி செய்கின்றனர்.

கனடாவின் வர்த்தக அமைச்சர் Mary Ng, அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி Katherine Tai ஆகியோர் வியாழக்கிழமை (05) Ottawaவில் சந்தித்தனர்.

வர்த்தகம் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், நெருக்கமான உறவுகளை உருவாக்குவதாக இவர்கள் இருவரும் கூறுகின்றனர்.

இரண்டு நாள் பயணமாக கனடா வருகை தந்துள்ள Tai, வெள்ளிக்கிழமை Markham நகரில் அமைந்துள்ள GM தொழிற்சாலையை பார்வையிடுகிறார்.

அங்கு கனடா-அமெரிக்க விநியோகச் சங்கிலிகள் ஒருங்கிணைந்த செயல்படுவதை Tai காண்பார் என அமைச்சர் Ng நம்பிக்கை தெரிவித்தார்.

Related posts

நான்காவது நாளாகவும் Quebecகில் தேடப்படும் சிறுவன்!

Gaya Raja

கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி

Lankathas Pathmanathan

ரஷ்யாவில் உக்ரைனுக்காக போரிட்ட கனடியர் மரணம்?

Lankathas Pathmanathan

Leave a Comment