தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontarioவில் NDP பெரும்பான்மை ஆட்சி அமைக்கும்: Andrea Horwath நம்பிக்கை

Ontarioவில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் புதிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கும் என Andrea Horwath நம்பிக்கை தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (05) NDP தலைவி Horwath தமிழ் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் தேசியம் சார்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் Horwath இதனை தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் NDP 100 தொகுதிகளில் முதலாவது அல்லது இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றிருந்தது எனவும் அவர் கூறினார்.

மத்திய அரசாங்கத்தை போல் Ontarioவில் Liberal – NDP கட்சிகளுக்கு கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை Horwath தவிர்த்தார்.

Related posts

Ontarioவில் ஒரு மாதத்தில் முதல் முறையாக புதிய COVID மரணங்கள் பதிவாகவில்லை

Lankathas Pathmanathan

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

Gaya Raja

மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment