தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம் வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்றது.

கட்சியை வழிநடத்த தெரிவாகியுள்ள ஆறு வேட்பாளர்களில் ஐவர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்தில் Pierre Poilievre, Leslyn Lewis, Roman Baber, Scott Aitchison, Jean Charest ஆகிய ஐந்து வேட்பாளர்கள் பங்கேற்றனர் .

ஆறாவது வேட்பாளரான Patrick Brown இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.

Ottawaவில் Canada Strong and Free Network நடத்தும் வருடாந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற இன்றைய விவாதம் உத்தியோகபூர்வ தலைமைத்துவ விவாதம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் அனைத்து வேட்பாளர்களும் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ விவாதங்களில் பங்கேற்பார்கள்.

Related posts

அமெரிக்க Open இறுதி சுற்றில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை கனேடிய ஆண் வீரர் இழந்துள்ளார்

Gaya Raja

தடுப்பூசி பெற்ற 270,000 கனடியர்கள் ஐரோப்பா பயணிக்க தகுதியற்றவர்களா?

Gaya Raja

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள சிறப்பு குழு உருவாக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment