கனடாவில் பாதுகாப்பானதும் சட்டப்பூர்வமானதுமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும் என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (04) தெரிவித்தார்.
கருக்கலைப்பு சேவைகள் தொடர்பாக ஆராய சுகாதார அமைச்சர், பெண் அமைச்சர் ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக Trudeau கூறினார்.
ஆனாலும் இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்ற விபரம் எதுவும் வெளியாகவில்லை.
அதேவேளை கருக்கலைப்பு செய்ய விரும்பும் அமெரிக்கர்கள் கனடாவுக்கு அனுமதிப்பதை உறுதிசெய்ய, கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துடன் பேசவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino கூறினார்.
1988 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக கருக்கலைப்பு கனடாவில் குற்றமற்றது என்பது குறிப்பிடத்தக்கது.