தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஒரு மாதத்தில் முதல் முறையாக புதிய COVID மரணங்கள் பதிவாகவில்லை

கடந்த ஒரு மாத காலத்தில் திங்கட்கிழமை (02) Ontarioவில் முதல் முறையாக புதிய COVID மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

ஆனாலும் தொற்றின் காரணமாக மூன்று நாட்கள் குறைவடைந்த அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திங்களன்று மீண்டும் அதிகரித்தது.

மாகாண ரீதியில் திங்கட்கிழமை 1,423 நோயாளிகள் தொற்றின் காரணமாக மருத்துவமனைகளின் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த வாரம் இந்த நேரத்தில் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,455 நோயாளிகளை விட சற்று குறைந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளில் 211 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 24 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றமில்லை

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment