ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் நுழைவதால் உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்கான உக்ரைனின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள Yulia Kovaliv இந்த கருத்தை தெரிவித்தார்.
கனடிய நாடாளுமன்ற வெளியுறவு குழுவில் திங்கட்கிழமை (02) அவர் உரையாற்றினார்.
உக்ரைன் தலைநகரில் தங்கள் பதவிகளுக்கு திரும்பும் தூதர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அழிப்பதற்கான சிறந்த வழி உக்ரைனுக்கான இராணுவ உதவியை அதிகரிப்பதாகும் என அவர் கூறினார்.
இராஜதந்திர உறவுகளை உறுதிப்படுத்துவது அவசியமானது எனவும் Kovaliv தெரிவித்தார்.
உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் அல்லது மனிதாபிமான உதவிகள் வழங்குவது உட்பட தன்னால் முடிந்த அனைத்தையும் கனடா தொடர்ந்து செய்யும் என திங்களன்று பிரதமர் Justin Trudeau கூறினார்.
February மாதம் 12ஆம் திகதி மூடப்பட்ட Kyivவில் உள்ள அதன் தூதரகத்தை மீண்டும் திறக்க கனேடிய அரசாங்கம் தொடர் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது.
உக்ரைனில் உள்ள கனடிய தூதரகம் அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில் மீண்டும் திறக்கப்படலாம் என கடந்த வாரம் வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறியிருந்தார்.
உக்ரைனுக்கான கனேடிய தூதரக ஊழியர்கள் தற்காலிகமாக போலந்தில் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.