கனடாவில் உள்ள ரஷ்ய சொத்துக்களை பறிமுதல் செய்து விற்பனை செய்ய புதிய அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்த புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து G7 கூட்டு நாடுகளுடன் கனடிய மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்க கூடிய திறனை உருவாக்குவதற்கும், அதன் இலாபத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் இந்த மசோதா முயல்கிறது என வெளியுறவு அமைச்சர் Melanie Joly கூறினார்.
கனடாவில் உள்ள ரஷ்ய தன்னலக் குழுக்களின் சொத்துக்கள் கணிசமானவை என அவர் கூறினார்.
பல ரஷ்யர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சொத்துக்களைக் கொண்டிருப்பதால், G7 இல் உள்ள ஏனைய நட்பு நாடுகளையும் இதுபோன்ற சட்டத்தை பரிசீலிக்க கனடா வற்புறுத்துவதாக Joly கூறினார்.
அதேவேளை உக்ரைனில் உள்ள கனடிய தூதரகம் அடுத்த சில நாட்கள் அல்லது வாரங்களில் மீண்டும் திறக்கப்படலாம் எனவும் அமைச்சர் Joly தெரிவித்தார்.
தூதரகப் பணியாளர்கள் தலைநகர் Kyiv வில் செயல்படுவார்களா அல்லது மேற்கு நகரமான Lvivவில் செயல்படுவார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை என அமைச்சர் கூறினார்.