வதிவிட பாடசாலைகளில் கனடாவின் பங்கு குறித்து விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரப்பட்டுள்ளது.
வதிவிட பாடசாலைகளுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்களில் கனடாவின் பங்கு குறித்த விசாரணையை ஆரம்பிக்குமாறு முதற்குடிகள் சபையின் தலைவர் RoseAnne Archibald கோரினார்.
பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
New Yorkகில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் நிரந்தர மன்றத்தின் 21வது அமர்வில் அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையையும் Archibaldஅனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இந்த விடயத்தில் ஐ.நா. விசாரணையை கனடா தடுக்காது என கனடிய நீதி அமைச்சர் David Lametti தெரிவித்துள்ளார்.