ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவும் அமெரிக்காவும் தொடர்ந்து அதிகபட்ச அழுத்தத்தை பிரயோகிக்கும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கனடிய – அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை (26) மெய்நிகர் வழியாக சந்தித்தனர்.
உக்ரைனுக்கான தற்போதைய ஆதரவு, NATOவுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முன்னுரிமைகள் குறித்து இருவரும் செவ்வாய்க்கிழமை விவாதித்ததாக அமைச்சர் Joly ஒரு அறிக்கையில் கூறினார்.
உக்ரைன் குறித்து இந்த வாரத்தின் பிற்பகுதியில், பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த், Pentagonனில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் Lloyd Austinனுடன் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சராக அமெரிக்க தலைநகருக்கு ஆனந்த் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.