தேசியம்
செய்திகள்

COVID காரணமாக ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள்

நீண்ட காலம் தாமதமான அறுவை சிகிச்சைகளை மீண்டும் ஒத்திவைப்பதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என Ontario மாகாண பிரதான எதிர்கட்சி வலியுறுத்துகின்றது.

Ontario முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் ஆறாவது COVID அலைக்கு மத்தியில் தொற்று தொடர்பான ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில் நீண்ட காலம் தாமதமான அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஒத்திவைப்பதைத் தவிர்க்க மாகாணம் என்ன நடவடிக்கைகளை  எடுக்கும் என எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக கட்சி புதன்கிழமை (13) வேள்வி எழுப்பியது.

ஆனாலும் அது போன்று நிகழும் ஆபத்து அதிகமாக இல்லை என சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.

அடுத்த சில வாரங்களில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 600ஐ எட்டும் என மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore அண்மையில் தெரிவித்திருந்தார்.

Related posts

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

Gaya Raja

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

Lankathas Pathmanathan

இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!

Gaya Raja

Leave a Comment