தேசியம்
செய்திகள்

Niagara Falls பகுதியில் மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

Niagara Falls பகுதியில் வியாழக்கிழமை (07) பின்னிரவு மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

Niagara Falls பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.

வியாழன் நள்ளிரவுக்கு பின்னர் 12:30 மணியளவில் (வெள்ளி அதிகாலை) Clifton Hill பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக Niagara பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

தூப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட மூவரும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களின் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார்.

காயமடைந்த இருவர் உலங்கு வானூர்தி மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் இருவரும் உயிர் ஆபத்தான நிலையை தாண்டியுள்ளதாக காவல்துறையினர் வெள்ளி பிற்பகல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறையினர் கூறுகின்றனர்.

Related posts

Toronto நகரசபை உறுப்பினராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பார்த்தி கந்தவேள்

Lankathas Pathmanathan

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது நபர் மரணம்

Lankathas Pathmanathan

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

Lankathas Pathmanathan

Leave a Comment