2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை 52.8 பில்லியன் டொலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (07) மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் Chrystia Freeland நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான டொலர்களுக்கு புதிய செலவினங்களை இந்தவரவு செலவுத் திட்டத்தில், நிதி அமைச்சர் வெளியிட்டார்.
இது பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முன்முயற்சிகளை இலக்காகக் கொண்டுள்ளது.
அரசாங்க செலவினங்களை மதிப்பாய்வு செய்து குறைக்க வேண்டும் என இந்த வரவு செலவு திட்டத்தில் Freeland வலியுறுத்தினார்.
அதே நேரத்தில் பற்றாக்குறையைத் தொடர்ந்து நீக்கும் வகையில் திட்டங்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
2022-23 நிதியாண்டிற்கான புதிய செலவில் 9.5 பில்லியன் டொலர்களை இந்த வரவு செலவுத் திட்டம் முன்மொழிகிறது.
இவற்றில் மிகப் பெரிய தொகை புதிய வீட்டு வசதி திட்டம், முதற்குடியினர் நல்லிணக்கம், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டம்,4.3 பில்லியன் டொலர்களை முதற்குடியினர் வீட்டு வசதி திட்டத்திற்கு ஒதுக்குகிறது.
தவிரவும் Liberal அரசாங்கம் உக்ரைனுக்கு 500 மில்லியன் டொலர் இராணுவ உதவியும், மனிதாபிமான உதவியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
அதே சமயம் 2 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான வருவாய் ஈட்டும் திட்டங்களை இந்த வரவு செலவுத் திட்டம் அடக்குகிறது.
இந்த வரவு செலவு திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மொத்த புதிய செலவினம் 60 பில்லியன் டொலர்கள் வரை உள்ளது.