NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை ஒன்று புதன்கிழமை (06) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வியாழக்கிழமை கனடாவின் மத்திய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணை 303 க்கு 27 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
Conservative, Liberal, Bloc Quebecois நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு பசுமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.
NATO செலவின இலக்கிலிருந்து கனடா வெகு தொலைவில் உள்ளதாக சமீபத்திய மதிப்பீடு சுட்டிக்காட்டியிருந்து இங்கு குறிப்பிடத்தக்கது.