கனடாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடிய அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்கொள்கிறது.
ஆனாலும் கனடாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவது, Moscowவில் உள்ள கனேடிய தூதர்களை அகற்றுவதற்கு ரஷ்யாவைத் தூண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.
இந்த நிலையில் உக்ரேனின் புறநகரில் நடந்த கொடூரமான கொலைகள் தொடர்பான ஆதாரங்களை அடிக்கோடிட்டு காட்டுவதற்காக கனடாவுக்கான ரஷ்ய தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (06) இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த பல நாட்களாக Bucha, Irpin பகுதிகளில் நிகழ்ந்த மோசமான நிகழ்வுகள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சம்பவங்களை உறுதிப்படுத்த Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரை வரவழைக்குமாறு தனது துணை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாக NATO தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் Joly கூறினார்.