December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் ஒரு COVID மறுமலர்ச்சி நிகழ்கிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

கனடாவில் ஒரு COVID மறுமலர்ச்சி நிகழ்வதாக வெள்ளிக்கிழமை (01) வெளியான புதிய modelling தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam வெள்ளியன்று இந்த தகவலை வெளியிட்டார்.

நேற்றைய நிலவரப்படி, தினசரி சராசரி தொற்றுகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொற்றின் செயல்பாடு பொதுவாக உயர்ந்ததாக சமீபத்திய தேசிய தொற்று கணிப்புகளை முன்வைக்கும் போது Tam தெரிவித்தார்.

கனடா முழுவதும் COVID கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில், நாடு மாற்றத்திற்கான காலத்தில் இருப்பதாக அவர் கூறினார்.

ஆனாலும் கனடா ஆறாவது அலையை எதிர்கொள்கிறது என்று கூற தயாராக இல்லை என துணை தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Howard Njoo தெரிவித்தார்.

Related posts

காணாமல் போன மூன்று வயது Mississauga சிறுவன் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Paris Paralympics: மூன்றாவது நாள் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath

Leave a Comment