முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான கனடாவின் பயண கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை (01) மாற்றமடைந்தன.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்களுக்கான நுழைவு முன் சோதனை தேவைகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.
ஆனாலும் தொற்று தொடர்பான பயண விதிகள் சில தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன.
கனடாவுக்குள் நுழைவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட வேண்டிய தேவை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
கட்டுப்பாட்டை நீக்கும் எண்ணம் இந்த நிலையில் இல்லை என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தவிரவும், பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு முன்னர் ArriveCAN செயலியை பயன்படுத்தி தேவையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.