நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது COVID தடுப்பூசி குறித்த வழிகாட்டுதலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது சுகாதார குறிகாட்டிகள் கனடா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் வியாழக்கிழமை (31) கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது.
வரவிருக்கும் நாட்களில் கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள முதியோர்களுக்கு நான்காவது துடுப்பூசி குறித்த நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் ஆலோசனையை வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில், NACIயிடமிருந்து உடனடியாக ஆலோசனையைப் பெற எதிர்பார்ப்பதாக Ontario சுகாதார அமைச்சர் Christine Elliott வியாழனன்று சட்ட சபையில் தெரிவித்தார்.
Quebec, இந்த வாரம் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களுக்கு நான்காவது தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.