நாடளாவிய ரீதியில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Ontario, Quebec மாகாணங்கள் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இது நாடளாவிய ரீதியில் பரவும் என எச்சரிக்கப்படுகிறது.
முகமூடி கட்டுப்பாடுகள் உட்பட தடுப்பூசி தேவைகளுக்கான ஆதாரம் போன்ற கட்டுப்பாடுகளை சுகாதார அதிகாரிகள் நீக்கியதால், தொற்றின் அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொது சுகாதார விழிப்புணர்வைக் குறைத்தது மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் அதிகரிப்புக்கு வழி சமைத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
Ontario, Quebec, Alberta, British Colombia ஆகிய மாகாணங்களின் தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறும் கழிவு நீர் பகுப்பாய்வு அறிக்கைகளை அதிகாரிகள் அண்மையில் வெளியிட்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொற்றை எதிர்கொண்ட பின்னர், Ontarioவில் உள்ள சில மருத்துவ வல்லுநர்கள் மாகாணம் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
“ஒரு வாரத்திற்கு முன்னர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது அதிகமான தொற்றின் எண்ணிக்கை உள்ளன” என தொற்றுநோய் நிபுணர் Dr. Isaac Bogoch தெரிவித்திருந்தார்
அடுத்த சில வாரங்களில் Ontarioவில் “மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்” எனவும் Bogoch செவ்வாய்க்கிழமை கூறினார்.
சில Ontario பொது சுகாதார அதிகாரிகள், தொற்றின் அதிகரிப்பு குறித்து எச்சரிப்பதுடன், தொடர்ந்தும் முகமூடி அணிவதை அறிவுறுத்துகின்றனர்.