February 22, 2025
தேசியம்
செய்திகள்

Ontario அரசிற்கும், கனடிய மத்திய அரசிற்கும் இடையில் குழந்தை பராமரிப்பு ஒப்பந்தம்

Ontario அரசாங்கத்திற்கும், கனடிய மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் குழந்தை பராமரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் குழந்தை பராமரிப்பு கட்டணம் Ontarioவில் பாதியாக குறைக்கப்படும்.
இன்று காலை Bramptonனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau மாகாண முதல்வர் Doug Ford ஆகியோர் இன்று ஒப்பந்தத்தின் விவரங்களை முறைப்படி அறிவித்தனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் September  2025க்குள் குழந்தை பராமரிப்பு நாளாந்தம் சராசரியாக 10 டொலர்களுக்கு கிடைக்கும் என மாகாண அரசாங்கம் கூறியது.
Trudeauவின் 30 பில்லியன் டொலர் தேசிய குழந்தை பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட இறுதி மாகாணம் Ontario ஆகும்.

Related posts

இரண்டு வாரங்களுக்கு LCBO கடைகள் மூடப்படும்?

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan

British Colombia முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment