February 23, 2025
தேசியம்
செய்திகள்

இஸ்லாம் மீது வெறுப்பு கொண்ட சமூக வலைத்தளத்தின் உறுப்பினராக இருந்த குற்றச் சாட்டில் NDP மாகாணசபை உறுப்பினர் கட்சியின் அவைக் குழுவில் இருந்து விலத்தல்

Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் அவைக் குழுவில் இருந்து மாகாண சபை உறுப்பினர் Paul Miller விலத்தப்பட்டுள்ளார்.

NDP கட்சியின் தலைவி Andrea Horwath இந்த முடிவு எடுத்துள்ளார்.

Hamilton East-Stoney Creek தொகுதியின் மாகாண சபை உறுப்பினரான Miller, இஸ்லாம் மீது வெறுப்பு கொண்ட சமூக வலைத்தளத்தின் உறுப்பினராக இருந்தார் என NDP குற்றம் சாட்டுகிறது.

2022 தேர்தலில் NDPயின் வேட்பாளராக Miller போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார் என தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் Horwath ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்
அவைக் குழுவில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் தனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை  என Miller தெரிவித்தார்.
தனக்கு எதிரான ஆதாரங்கள் புனையப்பட்டவை என கூறும் Miller, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்க்க ஒரு வழக்கறிஞரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் 2007ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக Miller கூறினார்.

Related posts

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

ஒரு மில்லியன் வீடுகள் கட்டப்படும்: O’Toole உறுதி !

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment