COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் காரணமாக Ottawa நகருக்கு 36.6 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது என தெரியவருகிறது.
இந்த குளிர்காலத்தில் Ottawa நகரின் தெருக்களை மூன்று வாரங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருந்த போராட்டத்தால், Ottawa நகரத்திற்கும் காவல்துறைக்குக்கும் 36 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டது.
Ottawa நகரத்தால் வெளியிடப்பட்ட நகர சபை உறுப்பினர்களுக்கான அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது.
இந்த இழப்பில் பெரும் பகுதி காவல்துறை செயல்பாட்டுக்கானது என கூறப்படுகிறது.
RCMPயின் உதவி உட்பட, காவல் பணிக்கு மொத்தம் 35 மில்லியன் டொலர் செலவானது என நகர ஊழியர்களின் குறிப்பு கூறுகிறது.
இந்த செலவில் உள்கட்டமைப்புக்கு சேதம் அல்லது பழுதுபார்ப்புகான மதிப்பீடுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.