COVID தொற்று Ontarioவில் மீண்டும் பரவ ஆரம்பிப்பதை அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுவதாக modelling தரவுகள் பரிந்துரைக்கிறது.
Ontario மாகாணம் இப்போது முதல் May மாதத்திற்கு இடையில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு தயாராக வேண்டும் என வியாழக்கிழமை (17) வெளியான புதிய modelling தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
Ontarioவில் நான்கு நாட்களில் பெரும்பாலான இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகள் முடிவடைகின்றன.
இந்த நிலையில் May மாதத்திற்குள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 300ஆக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது
இந்த கால கட்டத்தில் ஒட்டுமொத்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக இருக்கும் என எதிர்வு கூறல்கள் தெரிவிக்கின்றன
வியாழக்கிழமை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாக பதிவானது.
Ontario முழுவதிலும் 644 நோயாளிகள் வியாழக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.