முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான வருகைக்கு முந்தைய COVID சோதனைத் தேவையை கனடா இரத்து செய்கிறது என வியாழக்கிழமை (17) மத்திய அரசாங்கம் அறிவித்தது.
April 1ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், விமானம், நிலம் அல்லது நீர் மூலம் கனடாவுக்குள் நுழைவதற்கு, எதிர்மறையான COVID சோதனை முடிவை வழங்க வேண்டியதில்லை என வியாழனன்று அறிவிக்கப்பட்டது.
கனடாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாக கூறும் மத்திய அதிகாரிகள், தேவை ஏற்படும் போது பயணத் தேவைகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிவித்தனர்.
இந்த மாத இறுதியில் கனடாவிற்குள் நுழையும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு முன் வருகை சோதனை தேவைகள் நீக்கப்பட்டாலும், தொற்றுடன் தொடர்புடைய பிற பயண விதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
பயணிகள் தொடர்ந்தும் விமான நிலையங்களில் கட்டாய, PCR சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.
தடுப்பூசி போடப்படாத, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.