தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமருக்கு ரஷ்யாவினால் தடை

பிரதமர் Justin Trudeau, வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்  கரி அனந்தசங்கரி உட்பட  நூற்றுக்கணக்கான கனடியர்களுக்கு ரஷ்யாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் மொத்தம் 313 கனடியர்களை தடை விதிக்கப்படும் பட்டியலில் பெயரிட்டுள்ளது.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளில் உள்ள கனடியர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய மறுக்கப்படும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் உள்ளனர்.

ரஷ்யா மீது கனடா தனது அண்மைய பொருளாதாரத் தடைகளை அறிவித்த நிலையில், உக்ரைனை ஆதரித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா தடை செய்யும்  கனேடியர்களின் பட்டியல் வெளியானது.

ரஷ்யா மீதான கனடாவின் தொடர்ச்சியான தடைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ரஷ்ய  வெளியுறவு அமைச்சு தெரிவிக்கிறது.

கனடாவில் உள்ள உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரஷ்ய-விரோத நபர்களை குறிவைக்கும் வகையில் இந்த பட்டியல் வெளியாவதாக கூறப்படுகிறது.

இதில் கனடிய பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமை அதிகாரி ஜெனரல் Wayne Eyre, அமைச்சர்கள் பலரும் அடங்குகின்றனர்

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா

Lankathas Pathmanathan

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan

இந்த வாரம் காலாவதியாகிறது COVID தொற்று கால இரண்டு உதவித் திட்டங்கள்! !

Gaya Raja

Leave a Comment