Royal கனடிய விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.
விமானப்படையின் தேடுதல், மீட்பு உலங்கு வானூர்தி ஒன்று வியாழக்கிழமை (10) Newfoundland and Labrador மாகாணத்தின் Gander தளத்தில் விழுந்து நொறுங்கியது.
CH-149 Cormorant உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக கனடிய விமானப்படை கூறியது.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கு முன்னர் உலங்கு வானூர்தியில் ஆறு பேர் இருந்ததாக விமானப்படை கூறியது.
விபத்து தொடர்பாக விமானப் பாதுகாப்பு இயக்குநரகம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.