COVID கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும் நிலையில் தொடர்ந்தும் முகமூடி அணிவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
பொது சுகாதார நடவடிக்கைகள் தளர்த்தப்படும் நிலையில் தான் தொடர்ந்தும் முகமூடியை அணியவுள்ளதாக Dr. Howard Njoo கூறினார்.
நாடளாவிய ரீதியில் பல மாகாணங்கள் இந்த வார ஆரம்பத்தில் தங்கள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன.
ஏனைய மாகாணங்களும் பிரதேசங்களும் விரைவில் இந்த நடவடிக்கையை பின்பற்றவுள்ளன.
முகமூடி அணிவது நன்கு சோதிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறையாகும் என Dr. Njoo வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற பொது சுகாதார நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பயணம் அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற இடர் மேலாண்மையின் அடிப்படையில் கனேடியர்களுக்கு தனிப்பட்ட பொறுப்பை எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான நேரம் இது என அவர் கூறினார்.