February 23, 2025
தேசியம்
செய்திகள்

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கு Trudeau பயணம்

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கான பயணம் ஒன்றை பிரதமர் Justin Trudeau மேற்கொள்ளவுள்ளார்.

பங்காளி நாடுகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்பிற்காக அடுத்த வாரம் பிரதமர்  Trudeau ஐரோப்பா பயணமாகவுள்ளார்.

இங்கிலாந்து, Latvia, Germany, Poland ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக Trudeau வெள்ளிக்கிழமை (04) அறிவித்தார்.

இந்த பயணங்களில் நட்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

March 6 முதல் 11 வரை Trudeau வெளிநாட்டில் இருப்பார் என ஒரு அறிக்கையில்  பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

உக்ரேனில் ரஷ்ய தாக்குதல்கள் தொடரும் நிலையில் இந்த பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனை ஆதரிப்பது உட்பட, உலகெங்கிலும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவது குறித்து ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளதாக Trudeau கூறினார்.

திங்கட்கிழமை பிரிட்டிஷ் பிரதமர் Boris Johnson, டச்சு பிரதமர் Mark Rutte ஆகியோரை இங்கிலாந்தில் Trudeau சந்திக்கவுள்ளார்.

இங்கிலாந்தில் தங்கியிருக்கும்போது, Trudeau மகாராணியை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

போலந்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர், அங்கு அதிபர் Andrzej Dudaவை சந்திப்பார்.

Related posts

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் குறித்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் உள் சச்சரவுகள் தற்காலிகமானவை: தலைவி Paul

Gaya Raja

Leave a Comment